Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாரிடம் இருந்து நீ கற்பாய்? ராம ஜாதகத்தை வரைந்து பூஜை அறையில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாய்மையின் தாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
02:05


ஒரு காலத்தில் அரசர்களின் குலதெய்வமாக விளங்கியவள் கனக மகாலட்சுமி. ‘வாய்மையின் தாய்’ எனப் போற்றப்படும் இந்த அம்மனை தரிசித்தால் வறுமை நீங்கும், வாழ்வு சிறக்கும் வாருங்கள். தரிசிப்போம்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள புருகிப்பேட்டையில் அமைந்துள்ளது கனக மகாலட்சுமி கோயில்.  முன்பு ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள் கிணறு ஒன்றை வெட்டினர். அவர்களுக்கு பூமியில் இருந்து கைபின்னமான தேவி சிலை ஒன்று அகப்பட்டது. அப்போது அசரீரி, “இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் குலதெய்வமான கனக மகாலட்சுமி நான். யாம் இருக்கும் இடத்தில் வளம் கொழிக்கும். உருவம் இல்லாமல் இருந்த எனக்கு மன்னர் வடித்து தான் இந்தச் சிலை’’ ஒலித்தது. திருமகளின் வாக்கை உணர்ந்த மக்கள் கோயில் எழுப்ப முடிவு செய்தனர். “வானமே கூரையாக இருப்பதில் தான் எனக்கு விருப்பம்’ என தேவி அருள அப்படியே கூரை இன்றி  கோயில் கட்டினர். திருமகள் வரவால் ஊர் செழித்தது.
இப்பகுதி மக்கள் தேவியை ‘வாய்மையின் தாய்’  என்கின்றனர். பிறந்த குழந்தைகளை தேவியின் காலடியில் கிடத்தினால் நோய் அணுகாது. இந்த தேவியை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், மகப்பேறு கிட்டும். கனக மகாலட்சுமிக்கு வியாழக்கிழமை உரிய நாளாகும். மார்கழியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். அப்போது லலிதா சகஸ்ர நாமம், அன்னமய்யா பாடல்கள் பாடப்படுகின்றன. விசாகபட்டினம் வளர்ச்சிக்கு இந்த தேவியே காரணம்.  
எப்படி செல்வது: விசாகப்பட்டினத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி
நேரம்: அதிகாலை 5:00 மணி – நள்ளிரவு 12:00 மணி
தொடர்புக்கு:  91 8912566515, 94910 00651
அருகிலுள்ள தலம்: நரசிம்ம பட்டினம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
நேரம்: காலை 7:00 மணி – இரவு 7:00 மணி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar