கோவில் திருவிழா : சயனக்கோலத்தில் மதுரகாளியம்மன் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2022 09:31
நத்தம்: நத்தம் கர்ணம் தெரு செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன் கோவில் உற்சவத் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி மே 20 கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்துவந்து, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து காவல் தெய்வங்களுக்கு பழம் வைத்தல், அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் பாவித்து மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க கோவிலுக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மே 25 பால் குடம், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம், அரண்மனை பொங்கல் வைத்தல் நடந்தது. மே 26 மதியம் சிறப்பு அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று மே 27 உற்சவ அம்மன் மஞ்சள் நீராடி நகர்வலம் வந்து சயனக்கோலத்தில் ஊஞ்சல் உற்சவம் காணுதல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.