பதிவு செய்த நாள்
28
மே
2022
04:05
சிங்கப்பெருமாள் கோவில்: சிங்கப்பெருமாள் கோவில், அனுமந்தபுரம் செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற பல்லவர் கால பாடலாத்திரி நரசிங்க பெருமாள் சமேத அஹோபிலவல்லி தாயார் குடைவரை கோவில் உள்ளது.இக்கோவில் பிரம்மோற்சவ விழா, விமரிசையாக நடைபெறும். கோவில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் காரணமாக, 2015 முதல் பிரம்மோற்சவம் நடக்கவில்லை.கடந்த ஆண்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்ததை தொடர்ந்து, இந்தாண்டு பிரம்மோற்சவ பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.அதற்கான பந்தக்கால் நடும் விழா, நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் பகுதியில் நடந்தது. ஜூன் 3ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 9ம் தேதி நடக்கிறது.