ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சனார்கோட்டை வாளுடைய அய்யனார் கோவில், மண்டல பூஜையை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் குலதெய்வம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.