பதிவு செய்த நாள்
28
மே
2022
04:05
கோவை:கோவை ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளை சார்பில், ஜூலை மாதத்தில் மஹா ருத்ரம் மற்றும் ஸ்ரீ சதசண்டி ஜப யக்ஞம் யாக பூஜை நடக்கிறது.கோவையில் ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளை, 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக ராமகிருஷ்ண கனபாடிகள் உள்ளார்.இங்கு பெறப்படும் நன்கொடையால் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், வேத பாடசாலையில் வேதம் கற்பித்தல் உள்ளிட்ட பல காரியங்கள் செய்யப்படுகின்றன.
ஸ்ரீசங்கரா கோசாலையால் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. பசுக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.கோவை கணபதி விளாங்குறிச்சி ரோடு, ராஜவிக்னேஷ் நகர் ஆரிய வைத்திய சாலை அருகில், கோவை ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அனுக்கிரகத்தால், கர்ம பூமியாக மாற்றும் பணி துவங்கி உள்ளது.இந்த இடத்தில், ஸ்ரீ மஹா ருத்ரம் மற்றும் ஸ்ரீ சதசண்டி யாகம், ஜூலை 17 முதல், 22 வரை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடை மற்றும் பொருளுதவி அளித்து இந்த தர்ம காரியத்தில் பங்கு பெற்று ஸ்ரீ ஜகத்குரு ஆச்சாரியர்களின் அனுக்கிரகத்தை பெற வேண்டும் என, கோவை ஜகத்குரு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.நன்கொடை அளிப்பவர்கள் பெயர் மற்றும் முழு விபரம், மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்து இ-மெயில் அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தெரிவித்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு, 98422 91882, 99445 49621 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.