Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் பள்ளியில் அமைச்சர் ... ராமகிருஷ்ண மடத்தில் பலஹாரிணி காளி பூஜை ராமகிருஷ்ண மடத்தில் பலஹாரிணி காளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் பூ குண்ட திருவிழா
எழுத்தின் அளவு:
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் பூ குண்ட திருவிழா

பதிவு செய்த நாள்

28 மே
2022
05:05

கோத்தகிரி: கோத்தகிரி ஹேப்பிவேலி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. கோத்தகிரி ஹேப்பி வேலி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நடந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு நடந்த பால் அபிஷேகம், கும்மி பாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து, ஸ்ரீ பச்சை மரத்தையன் பூஜை மற்றும் உச்சக்கால நடந்தது. தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தைகள் உட்பட, ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (29ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, அம்மன் மஞ்சள் நீராடலும், பகல், 1:00 மணிக்கு, உச்சகால பூஜை, 2:00 மணிக்கு, அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஹேப்பி வேலி பகுதி மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar