வடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊர் பிரமுகர்களால் சன்னதியில் இருந்து அழைத்து வரப்பட, ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 4.15 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், ஒட்டன்சத்திரம் ரோடு வழியே தேர்வலம் வந்தது. தாசில்தார் மாரியம்மாள், பேரூராட்சி தலைவர் பாப்பாத்தி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயல் அலுவலர் விஜயநாத் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்