பதிவு செய்த நாள்
03
ஆக
2012
11:08
தாடிக்கொம்பு, ஆக. 3 தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடிதிருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. அமைச்சர் விசுவநாதன், அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலெக்டர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ., க்கள் பழனிச்சாமி, வேணுகோபாலு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துதியாகராஜன், உதவி ஆணையர் ரமேஷ், நகராட்சி தலைவர் மருதராஜ், அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத்தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி,
துணைத்தலைவர் சுப்பிரமணி, தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சகாயஅந்தோணி யூஜின், அருணா சேம்பர் மணிகண்டன், திண்டுக்கல் போர்வெல் சங்க நிர்வாகி நாச்சிமுத்து, நாட்ராயன், ஆத்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனபாலன், டாக்டர்கள் திருலோகசந்திரன், பாலசுந்தரி, காமாட்சி டைரி பார்ம்ஸ் உரிமையாளர் செல்வகுமார், இந்து முன்னனி மாவட்ட பொதுச் செயலாளர் ரவிபாலன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.