புதுச்சேரி: மணக்குள விநாயகருக்கு இன்று 28ம் தேதி 1008இளநீர் அபிஷேகம் நடக்கிறது.தமிழகம், புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம், கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைவதால்மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமிக்கு இன்று காலை 1008 இளநீர் அபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, காலை 9:00 மணியளவில் அக்னி நட்சத்திர சாந்தி அபிேஷகமும் நடக்கிறது.