பதிவு செய்த நாள்
30
மே
2022
09:05
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். வைகாசி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரத்திற்கு வேன், கார், பஸ்சில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள், நேற்று காலை அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, கடலில் நீராடினர். பின், கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது.