மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் ஆடி பெருக்கு விழா நடந்தது.மயிலம் பகுதியில் உள்ள விவசாயிகள் சார்பில் நேற்று ஆடிப் பெருக்கு விழா நடந்தது. மயிலம் மலைக் கோவிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை ஊர்வலமாக அழைத்து வந்து ஆற்றங்கரையில் உள்ள தோப்பில் மாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தோப்பில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டனர்.