பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
பேரம்பாக்கம் : கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக ஈஸ்வரன் கோவிலில், மகா பவித்ரோற்சவ விழா நடந்தது. தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற, 32 தலங்களுள், 14வது தலமாக உள்ளது கூவம் திரிபுராந்தக ஈஸ்வரன் கோவில். தீண்டாத் திருமேனியர் எழுந்தருளி உள்ள இக்கோவிலில், கடந்த 29ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மறுநாள் காலை, கோவிலில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கணபதி ஹோமத்துடன் மகா பவித்ரோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், மாகருத்ர ஹோமம் நடந்தது. கோவில் வளாகத்தில், 108 கலசங்கள் வைத்து தினசரி யாக பூஜை நடந்தது. இறுதி நாளான, நேற்று முன்தினம் இரவு வேத திருமுறை ராயணத்துடன், உற்சவர் திருவீதியுலா வந்து பவித்ரோற்சவ விழா நிறைவடைந்தது.