வீராங்கனை ஒருத்திக்கும், இளவரசன் ஒருவனுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஆரம்பத்தில் இருவரும் வேகமாக ஓடினர். சிறிது நேரத்தில் இளவரசனை முந்த ஆரம்பித்தாள் வீராங்கனை. இளவரசன் அவளது கவனத்தை சிதறடிக்க தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அது பளபளத்தபடியே அவளுக்கு முன்னால் சென்றது. அதை கையில் எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். அடுத்து முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை இளவரசன் உருட்டினான். அதையும் எடுக்க அவளது வேகம் குறைந்தது. இதையடுத்து, வைர ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட, அவள் குறிக்கோளை மறந்தாள். அவளை வேகமாக முந்தி இளவரசன் வெற்றி பெற்றான். விட்டான். வாழ்க்கையும் ஒரு ஓட்டப்பந்தயமே. அதில் நம் மன உறுதியை திருப்பும்படியாக, சாத்தான் பலவித தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். இதனால் பலர் லட்சியங்களை மறந்து திசை மாறுகின்றனர். ஆண்டவரைத் தவிர வேறு எதையும் நாம் குறிக்கோளாக ஏற்கக் கூடாது.