பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
செஞ்சி : செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் வெங்கடேச பெருமாள் சன்னதிக்கு வாயிற்படி அமைக்கும் பணி நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து வருகின்றனர். புதிதாக மூன்று நிலை வாயிற் கோபுரமும், ஐந்து நிலை ராஜ கோபுரமும் கட்டி உள்ளனர். தற்போது புதிதாக வெங்கடேச பெருமாளுக்கு சன்னதி அமைத்து வருகின்றனர். இதில் 8 அடி 3 அங்குலம் உயரமுள்ள 4.50 லட்சம் மதிப்பிலான வெங்கடேசபெருமாளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இச்சன்னதியின் வாயிற்படி அமைக்கும் பணி நேற்று நடந்தது. வாயிற் படிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, கிரேன் மூலம் பொருத்தினர்.இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் அரங்க ஏழுமலை, செல்வம், சர்தார் சிங், ஆசிரியர்கள் ராமமூர்த்தி, ஜெயக்குமார், பேரூராட்சி
துணை தலைவர் சங்கர், வெங்கடேச பெருமாள் சிலை உபயதாரர்கள் டாக்டர் ரமேஷ்பாபு, ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் தண்டபாணி, ரங்கராஜ், சங்கர், சீனு, சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.