லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடி பவுர்ணமி ஜோதி தரிசன விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2012 12:08
செஞ்சி : செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மகா புஷ்பாஞ்சலியும், ஜோதி தரிசனமும் நடந்தது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 9 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பகல் 10 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 2 மணிக்கு கிராம தேவதைகளுக்கு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு மகா அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடந்தது. இரவு 11 மணிக்கு அஷ்டோத்ர சத நாமவலி அர்ச்சனையும், சித்தர்களுக்கு விளக்கு பூஜையும் நடந்தது. 11.30 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும், தொடர்ந்து 16 வகை ஷேடச உபசரணை நிகழ்ச்சியும் நடந்தது. பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார். அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.