கருவாடு வியாபாரிகள் இருவர், வியாபாரம் முடித்து விட்டு ஊர் திரும்பும் வழியில் மழை பெய்யவே, ஒரு வீட்டின் திண்ணையில் ஒதுங்கினர். அந்த வீட்டுக்காரர் வீட்டிற்குள் துாங்க இடம் கொடுத்தார். அவரோ வாசனைத்திரவியம் விற்பவர் என்பதால் வீட்டில் மணம் கமழ்ந்தது. வியாபாரிகளுக்கோ துாக்கம் வரவில்லை. ‘கருவாட்டுக் கூடையை அருகில் வைத்தால் தான் துாக்கம் வரும்’ என்று சொல்லி திண்ணைக்குச் சென்றனர். சற்று நேரத்தில் அயர்ந்தனர். இதை போல ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயம் வெவ்வேறாக இருக்கிறது. இளமையில் உருவான பழக்கம் வாழ்வின் இறுதி வரை தொடரும். எனவே குழந்தைகளுக்கு நல்லதை மட்டும் பழக்குங்கள்.