பதிவு செய்த நாள்
30
மே
2022
11:05
கருணையே வடிவான பார்வதி, அசுரர்களை அழிக்கும் போது காளியாக உருவெடுக்கிறாள். அவளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் உண்டு. ஆனால் அவளுக்கான காணிக்கை எது தெரியுமா?
நம் மனதில் ஆறுவிதமான பகைவர்கள் உள்ளனர். அவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம். (பேராசை, கோபம், கருமித்தனம், பெண்ணாசை, ஆணவம், பொறாமை) இவற்றை அழிக்கும் வலிமையை தருபவள் காளி. இத்தீய பண்புகளின் குறியீடாக வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை பழங்காலத்தில் பலியிடுவர். இதை உணர்ந்தவர்கள் தீயபண்புகளை பலி கொடுத்து மனம் திருந்துவர் என்பதில் சந்தேகமில்லை.