* ஆனி பவுர்ணமியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் அபிஷேகம் செய்கின்றனர். * எப்போதும் மாணிக்க மூக்குத்தி அணிந்திருக்கும் மீனாட்சியம்மனை தரிசிப்பது விசேஷம். வைர கிரீடத்துடன் அம்மனை தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை நாட்களில் தரிசிக்கலாம். * மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதால் ‘சித்திர கோபுரம்’ எனப்படுகிறது. இந்த கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சதாசிவம் சிற்பம் அற்புதமானது. இதனை துலாபார துாண் அருகில் நின்று பார்க்கலாம். * பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள துாண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், வணிகர் தனஞ்செயன் சிலைகள் உள்ளன.