மேட்டுப்பாளையம்: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிலும், ராஜமாரியம்மன் கோவிலில்சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஒன்று. அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, பவானி ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். நேற்று வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு, காலை கோவில் நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையத்தில், ராஜமாரியம்மன் கோவிலில், வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.