கோவில்பாளையம்: குரும்பபாளையம், செல்லாண்டியம்மன் கோவில் திருக்கல்யாணம் நடக்கிறது.
கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம், செல்லாண்டியம்மன் கோவிலில், 81வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 25ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 27ம் தேதி, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. 28ம் தேதி ஆதி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 29ம் தேதி இரவு மகா சரஸ்வதி அலங்காரத்திலும், 30ம் தேதி இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தார். இன்று சங்கு பூஜை நடந்தது. கருமாரியம்மன் அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கொங்குவேளாள பாண்டியன் குலத்தார் பங்கேற்றனர். நாளை அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நடக்கிறது. வரும் 3ம் தேதி அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு நடக்கிறது.