மேலூர்: திருவாதவூர் பிடாரி அம்மன் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் நேற்று பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அம்மன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாதவூர், உலகுபிச்சன்பட்டி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.