காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2022 09:06
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை தினந் தினம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10.5. 2022 முதல் கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் தங்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணி இன்று புதன்கிழமை காலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் பணமாக ஒரு கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 912 ரூபாய், தங்கம் ; 65 கிராம், வெள்ளி ; 494.கிலோ 300 கிராம், வெளிநாட்டு பணம் 82 , குவைத் : 6, மலேசியா : 9, அபுதாபி 2, அமெரிக்கா : 58, சிங்கப்பூர் : 05, ஆஸ்திரேலியா :2, போன்ற நாடுகளின் பணம் இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.