ஊத்துக்கோட்டை, ; ஊத்துக்கோட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீரஆஞ்சநேய சுவாமி கோவில். இந்தாண்டு கடந்த 25ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், காலை 10:00 -- 11:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.காலை 11:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை பஜனை நிகழ்ச்சியும், மதியம் 2:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை ஹரிகதாகானம் நடந்தது.விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டவர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.