பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
05:06
பழநி: பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில் வருடாபிஷேகம் இதை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் யாக பூஜை நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான கோதைமங்கலம், சண்முக நதிக்கரையில் பெரியாவுடையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் நிகழ்த்தினர். இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அண்ட் சன்ஸ் தனசேகரன், பழனிவேல், கார்த்திகேயன், நாகராஜன், அசோக்குமார், செந்தில்குமார், சதீஷ்குமார், விஜயகுமார், கொங்கு வெள்ளாளர் சங்க ஆலோசகர் மாரிமுத்து, தாய் மருத்துவமனை சுப்புராஜ், பெரியநாயகி அம்மன் கோயில் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.