பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
05:06
செங்கல்பட்டு: செங்கல்பட்டு விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
செங்கல்பட்டு, அண்ணா நகர் பகுதியில் லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக ஸ்ரீதேவி, பூதேவி, நீலா தேவி, சமேத சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர், அஷ்டபுஜலட்சுமி, பால் முனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இதையடுத்து, இரு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. இன்று, தீபாராதனைகள், யாகசாலை பூஜைகள் முடிந்து, கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்தனர்.