அவிநாசி: அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சியில் உள்ள கந்தம்பாளையத்தில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகள் கோவிலில் இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. நேற்றுமுன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக யாகசாலைக்கு பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து சென்றனர். முன்னதாக, காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்தி கோவிலில், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது.கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.