பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
06:06
புதுச்சேரி : அண்ணா நகர் ரேணுகா பரமேஸ்வரி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.புதுச்சேரி அண்ணா நகரில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி மற்றும் மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப் பட்டது.
அதனையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.பின்னர் விக்ரகங்கள் கரிக்கோலம் வந்து, பிம்ப ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், மற்றும் கோபுர ஸ்தாபனம் நடைபெற்றது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. 31ம் தேதி யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது.
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகர், காலபைரவர், சூரியன், சந்திரன் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சபாநாயகர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.