காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்த மேல்கரையில் உள்ள தீர்த்தேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது.பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளத்தின் மேல்கரையில், காமாட்சியம்மன் சமேத தீர்த்தேசுவரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் முடிவு செய்து, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த, 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. 31ம் தேதி காலை, 8:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் யாகசாலை நிர்மாணம், மாலை 6:00 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 6:00 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.