கன்னிமூல கணபதி, ராகு, சேது கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 06:06
செட்டிபாளையம்: மலுமிச்சம்பட்டியிலுள்ள ராக்கி செட்டியார் தோட்டத்தில் கன்னிமூல கணபதி, ராகு, கேது தெய்வங்களுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று மாலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கலச பூஜை, முதற்கால யாக பூஜை உள்ளிட்டவையுடன் துவங்கியது. இன்று காலை, 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம். சுதர்சன ஹோமம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடக்கின்றன. தொடர்ந்து, 8:00 - 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மசா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்டவை நடக்கின்றன.