பதிவு செய்த நாள்
05
ஜூன்
2022
10:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே நஞ்சே கவுண்டன்புதூரில் பரமசிவன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா, மங்கல இசை, முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு வழிபாடுடன் தொடங்கியது. தொடர்ந்து, 108 காய்கறிகள், மூலிகைப் பொருட்கள், பேரொளி வழிபாடு, மந்திர திருநீற்றுப் பிரசாதம் வழங்கி, திருச்சுற்று மூர்த்திகளுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடங்கள் திருக்கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மூலமூர்த்திகளுக்கு தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அலங்கார பூஜை, திருநீறு பிரசாதம் வழங்குதல், அன்னதானம், ஒயிலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.