நாட்டரசன்கோட்டை வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2022 10:06
நாட்டரசன்கோட்டை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஜூன் 12ல் தேரோட்டம் நடக்கும். இக்கோயிலின் வைகாசி திருவிழா ஜூன் 3ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. முதல் நாள் விழாவான நேற்று காலை 10:50 முதல் 11:50க்குள் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றி விழா துவங்கியது. நேற்று மாலை 4:35 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் இரவு 7:00 மணிக்கு வெள்ளி கேடக வாகனத்தில் அம்மன்புறப்பாடு நடைபெற்றது. தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப, குதிரை வாகனங்களில் புறப்பாடு நடக்கும். விழாவின் 7ம் நாளான ஜூன் 10 அன்று காலை தங்க ரத புறப்பாடு நடக்கும். ஜூன் 11 அன்று களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டி, அலங்கார மண்டபத்தில் எழுந்தருள்வார்.9ம் நாளான ஜூன் 12 அன்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான ஜூன் 13 அன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர்.