சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் விசாக திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2022 08:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கிராமத்தில் 10 நாட்கள் எழுந்தருளியிருந்த விநாயகர் கிராமத்தார்கள் அளித்த காணிக்கையுடன் நேற்று மீண்டும் கோயிலுக்கு திரும்பினார். மதியம் 1:30 மணிக்கு பூரணை புஷ்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் காப்பு கட்டப்பட்டது. 1:45 மணிக்கு பிடாரி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 2:15 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பிரதான கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் தேவியருடன் ஐயனார் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். ஜூன் 13ம் தேதி திருத்தேரோட்டமும், 14ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.