கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசிப் பெருவிழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. சிவா குருக்கள் கொடியேற்றினார். பூஜை ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் செய்திருந்தார்.
தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி காலை 5:30 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு தெருவடைச்சான், 11ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.13ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேரோட்டம், 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் திருக்கல்யாணம், 15ம் தேதி காலை 7:30 மணிக்கு திருஞானசம்பந்தர் திருக்குளத்தில் எழுந்தருளி ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.