Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் ... சிறுமுகை எமதர்மர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறுமுகை எமதர்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹிந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
08:06

மதுரை : ஹிந்து தர்மத்தை காக்க ஹிந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என, மதுரையில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத், அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் துறவியர் மாநாட்டில் அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பிராண்டே தெரிவிக்க துறவிகள் மற்றும் மக்கள், ஜெய் ஸ்ரீராம் என, வீர முழக்கமிட்டனர். அவர் பேசுகையில், வேற்றுமத அமைப்பு ஹிந்து மதத்திற்கு கேடு விளைவிக்கிறது. கேரளாவில் ஒரு மத அமைப்பின் கூட்டத்தில், ஹிந்துக்களே சாக தயாராக இருங்கள் என்ற கோஷம் கிளம்பியது. 10 ஆண்டுகளில் 1.2 கோடி இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்போம் என, அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.ஹிந்து மதத்தை குழி தோண்டி புதைப்பதை பார்த்து சுவாமிகள் முருகன், பெருமாள், ஈசன் அஞ்ச மாட்டார்கள். அவர்கள் கையிலும் ஆயுதங்கள் இருப்பதை மறந்து விடாதீர், என்றார்.

உண்டியல் : மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பேசுகையில்,ஆதீனம் அரசியல் பேச கூடாது என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை. சுவாமி துஷ்ட தேவதை என்பவர்களுக்கு உண்டியல் மட்டும் இஷ்ட தேவதையா. அறநிலைய துறையை நீக்கி விட்டு கோவில்களை நீதிபதி தலைமையில் எங்கள் வசம் ஒப்படையுங்கள், என்றார். மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் பேசுகையில், இனி யார் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசினாலும் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும், என்றார்.சின்மயா மிஷன் சிவயோகானந்தா பேசுகையில், விவேகானந்தருக்கு பின் சுவாமி சின்மயா நந்தா வீரத் துறவியாக திகழ்ந்தார். வேள்வி தாய் என போற்றப்படும் பசு இல்லை என்றால் உணவு இல்லை. அதனால், தமிழகத்தில் பசு வதை தடை சட்டம் அவசியம், என்றார்.

ஹிந்து நாடு: கோவை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், இது ஹிந்து நாடு. ஆனால் மற்ற மதத்தினருக்கு எதிரான நாடல்ல. அப்படி இருந்தும் சுவாமி நடராஜரை இழிவாக பேசுகின்றனர். கோவிலுக்குள் இருக்க வேண்டிய குருமகா சன்னிதானங்கள் ஹிந்து மதத்தை காக்க ரோட்டில் அலைகின்றனர், என்றார்.

விழித்தெழு : ஸ்தாணுமாலயன், வி.எச்.பி., இணை பொதுச் செயலாளர் பேசுகையில், ராமர் பாலம் இடிக்க இங்கு அடிக்கல் நாட்டினர். அதற்கு எதிராக வி.எச்.பி., போராட்டம் நடத்தி அதை கைவிட வைத்தது. சிவன் நடந்த, மண் சுமந்த ஊர் இது. ஆட்சியாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும். கிருஷ்ண பகவான் அதர்மத்தை அழிப்பார். கி.மு., கி.பி., எல்லாம் நமக்கு கிருஷ்ணர் பிறப்புக்குமுன் பின் தான், என்றார்.கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மதமாற்ற தடை சட்டம், நல்லிணக்கம் பேண உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆதீனங்கள் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யர், சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமநந்த குமரகுருப, சடகோப ராமானுஜ ஜீயர், ராகவாநந்தா சுவாமிகள், குமர பிரியா மதா, துறவிகள், சாதுக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar