வியாபாரத்தை பெருக்க சிலர் செய்யும் தந்திரம்; சத்தியம் செய்து பொருட்களை விற்பது. இறைவன் மீது ஆணையாக ‘இது தான் அசல் விலை, மிகத்தரமானது,நயமானது’ என்று சொல்லுவார்கள். வாடிக்கையாளர்கள் இவர் பேசுவது உண்மை தான் என பொருட்களையும் வாங்கிக் கொள்வர். ஆனால் வீட்டிற்கு போனால் இவரது சாயம் வெளுத்து விடும். அடுத்த கடையில் வாங்கும் போது முன்னர் வாங்கிய பொருளின் உண்மை நிலையும், தரமும் வெளிப்பட்டு விடும். பொருட்களை விற்பதிலும் பொய் பேசுகிறான் இறைவனைக்கூட சாட்சிக்கு அழைக்கிறான் என்பதை அறியும் போது வியாபாரம் படுத்து விடும் எனவே தான் நாயகம் சத்தியம் செய்து பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்துள்ளார்.