அறுவடைக்காக காத்திருந்த தனது வயல்களை பார்த்தார் செல்வந்தரான ஆல்பர்ட். ‘இத்தனை தானியங்களை சேமித்து வைக்க என்னிடம் இடம் இல்லையே.. என்ன செய்வேன்’ என வருந்தினார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகில் உள்ள விவசாயியான ஜோசப்பின் நிலத்தை அபகரித்தார். அப்புறம் என்ன.. தானியம் வைக்கும் இடம் தயாரானது. பாவம் ஏழையான ஜோசப்பால் செல்வந்தரை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. கொட்டிக்கிடக்கும் தானியங்களை பார்த்ததும் செல்வந்தர் மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென நெஞ்சுவலி வரவே, சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. பார்த்தீர்களா.. இவ்வளவுதான் நமது வாழ்க்கை. இதற்குள் நாம் செய்யும் செயல்கள்தான் வாழ்க்கையை தீ்ர்மானிக்கிறது. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.