குறைந்த வருமானம் கொண்ட சிலர் உண்மையை மறைத்து தற்புகழ்ச்சியாக பணக்காரர் போலவும், அந்தஸ்து மிக்கவர் போலவும் பெருமை பேசுவார்கள். இப்படிப்பட்டவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறார் நபிகள் நாயகம். நரகம் செல்வோர் யார் என ஒருமுறை கேட்ட போது, ‘கொடுங்கோலன், ஏழைகளுக்கு உதவாதவன், பெற்றோருக்கு துன்பம் செய்பவன், கோள் சொல்பவன், குடிகாரன், தற்பெருமை பேசுபவன் நரகத்திற்கு போவான்’ என்றார். “நான் ஏழை தான்... ஆனால், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என மற்றவர்களின் முன்னிலையில் யார் ஒருவர் தைரியமாக சொல்கிறாரோ அவரே இறைவனுக்கு பிடித்தமானவர்.