மயிலம் : மயிலம் வெளியனுார் கிராமத்தில் முத்து மாரியம்மன், அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று 6ம் தேதி அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் பூரணி, பொற்கலை, அய்யனார் சுவாமிக்கு திருமண உற்சவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.