ஆனைமலை: ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்ததால், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது.இந்நிலையில், கோவிலை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிக்குழு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.முதற்கட்டமாக அர்த்த மண்டபம், மகா மண்டபம் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. இதையடுத்து, கோவில் திருப்பணி துவக்க விழா பூஜை நடந்தது. அபிஷேக ஆராதனை, துவக்க விழா பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.