பதிவு செய்த நாள்
04
ஆக
2012
11:08
ஆத்தூர்: ஆத்தூரில், மழை பெய்ய வேண்டியும், உலக நன்மை மற்றும் பல்வேறு பிரச்னைகள் நீங்குவதற்கு, மதுரகாளியம்மன் கோவிலில், 550 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.ஆத்தூர் கோட்டை, அகழிமேடு, சம்போடை வனம் பகுதியில், பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மைக்கும், மழை பெய்ய வேண்டியும், பல்வேறு பிரச்னைகள் நீங்குவதற்கும், தீப லட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது.இதில், ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த, 550 பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மூலவர் மதுரகாளியம்மனுக்கு, பல்வேறு
அபிஷேக பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.