புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வன்னிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி, லட்சுமி சுதஸ்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு திருமஞ்சன தீர்த்த குடங்கள் ஊர்வலம், சதுஸ்தான பூஜை முதல் கால ஹோமங்கள், மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால திருவாராதனம் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று 11ம் தேதி காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, 9:00 மணிக்கு யாத்ராதானம், காலை 9:30 மணிக்கு கும்பங்கள், பெருமாள் புறப்பாடு நடைபெற்று, காலை 11:20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு தங்க கருட சேவை நடக்கிறது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சம்பத் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.