மதுரை -மதுரை சொக்கிகுளம் காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளையில் லட்சுமி விநாயகர், ஆதி சங்கர பகவத்பாதாள், காமாட்சி உடனுறை சந்த்ரமவுலீஸ் வர சுவாமி கோயில் கும்பாபிேஷகம் ஜூன் 13 காலை 6:00 மணி முதல் 7:30க்குள் நடக்கிறது.இதையொட்டி நாளை (ஜூன் 11) காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கி, இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. இத்துடன் தினம் காலை அபிேஷக அலங்கார பூஜைகளும், மாலை பாராயணம், நாம ஸங்கீர்த்தனம் சங்கீத கச்சேரிகளும் நடக்கின்றன. ஜூன் 14 முதல் ஆக., 2 வரை மண்டலாபிேஷகம் நடக்கிறது. பொருளுதவி, நன்கொடை அளிக்க விரும்புவோர் 94431 51258ல் தொடர்புகொள்ளலாம். ஏற்பாடுகளை மடம் நிர்வாகிகள் செய்கின்றனர்.