கொடைரோடு: அம்மையநாயக்கனூர் அருகே இந்திரா நகர் காளியம்மன் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. வாண வேடிக்கையுடன் கரகம் அழைத்து வரப்பட்டது. அம்மனுக்கு மாவிளக்கு பூஜை எடுத்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பாரம்பரிய முறைப்படி கும்மி, குலகை சப்தத்துடன் வழிபட்டனர், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பொங்கல் வைத்து வழிபட்டனர். கிடாய் வெட்டுதல் , தீச்சட்டி எடுத்தல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.