பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
03:06
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில், சின்னா ரெட்டியாபட்டி முத்தையாசாமி 5 பங்காளி வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட, சோலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் விநாயகர் பூஜை, புண்ணியாகவாசனம், பகவத் அனுக்ஞை, தீர்த்தம் அழைத்தல், சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் நடந்தது. ஸ்ரீ ருத்ரம், பஞ்ச ருத்ர பாராயணம் நடந்தது. நேற்று காலை கோபூஜை, சோலையம்மன் ஹோமம், நாடி சந்தனம், கடம் புறப்பாடு, சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவிலாங்குளம், ரோசல்பட்டி, குன்னத்தூர், தமிழ்பாடி, மதுரையை சேர்ந்த விழா குழுவினர் செய்தனர்.