அன்னூர்: தாசபாளையம், சக்தி வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது. கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில், பழமையான சக்தி வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையடுத்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா வரும் 12ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலையில், அய்யன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், முதற்கால வேள்வி பூஜை, வேத பாராயணம் நடக்கிறது. வரும் 13ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 9:30 மணிக்கு விமான கோபுரங்கள், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் சக்தி வீரமாத்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.