ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர், கருப்பணசுவாமி கோவில் பூக்குழி விழா, ஜூன் 2-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் கடைசி நாளான நேற்று, விரதமிருந்த பக்தர்கள் கோவில் முன்பு, தீ மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். பின்பு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.