Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் மகாமாரியம்மன் கோவில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் மகாமாரியம்மன் கோவில் தீமிதி விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
11:06

மயிலாடுதுறை : திருக்கடையூர் அருகே டி. மணல்மேட்டில் மகாமாரியம்மன்  கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே டி. மணல்மேடு கிராமத்தில்  மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும்  மகாமாரியம்மன் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து நேற்று தீமிதி திருவிழா முன்னிட்டு மாலை 6 மணி அளவில் மார்கண்டேயர் கோவிலில்  இருந்து  கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க  மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து இரவு 6:30 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை டி. மணல்மேடு கிராமத்தினர் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar