Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜை தணலாய் எழுந்த சிவனே... ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம் தணலாய் எழுந்த சிவனே... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் வைபவம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
11:06

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நம்மாழ்வார் வைபவம் நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு, 12 ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு, ஜெயந்தி வைபவம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நம்மாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு, வைபவம் நடந்தது. மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜை ஆகியவை செய்யப்பட்டன. உற்சவர் நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில், ராமானுஜர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். அங்கு அவருக்கு புண்ணிய வாசனம், கலச ஆவாஹனம், திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு வெள்ளி சப்பரத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்கம் மண்டபத்தில் எழுந்தருளினார். அவருக்கு பரிவட்டம், சடாரி மரியாதை செய்யப்பட்டது. கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் இயற்றிய, திருவாய் பாசுரங்களை சேவித்தனர். பின்பு கோவில் வளாகத்தில் மீண்டும் வலம் வந்த நம்மாழ்வார், ராமானுஜர் சன்னதியை அடைந்தார். இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar