Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தணலாய் எழுந்த சிவனே... ... பிரதோஷம் : போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை பிரதோஷம் : போடி சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் வைகாசி விசாக விழா நிறைவு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் வைகாசி விசாக விழா நிறைவு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
12:06

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று நடந்த தெப்பத்துடன் விழா நிறைவடைந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைசாக விசாக விழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் சுவாமியும் அம்பாளும் வாகனங்களில் இரவில் திருவீதி உலா வந்தனர். ஜூன் 6 ல் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டு, ஜூன்7 ல் திருக்கல்யாணம், ஜூன் 10 ல் காலையில் நடராஜர் புறப்பாடு, ஜூன் 11ல் தேரோட்டமும் நடந்தது. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 11:00 மணி அளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை 5:00 மணி அளவில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி தேவருக்கும், மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனகளும் நடந்தன. தொடர்ந்து இரவில் பஞ்சமூர்த்திகளும் தெப்பமண்டபத்தில் எழந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்த பின் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பம் சீதளிக்குளத்தில் மும்முறை வலம் வந்தது. பக்தர்கள் திரளாக குளத்தைச் சுற்றி நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து கோயிலில் எழுந்தருளலுடன் வைகாசி விசாக விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar