மானாமதுரையில் நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற களரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2022 06:06
மானாமதுரை: மானாமதுரையில் உள்ள சங்கு விநாயகர் கோயிலில் கலரி திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கலரி மற்றும் அசைவ படையல் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள கற்பூர சுந்தர சாமி, பொன்னர் சங்கர்,முத்துராக்கு,கோட்டை முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வருடந்தோறும் வைகாசி மாதம் களரி பூஜை மற்றும் அசைவ படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அசைவ படையல் மற்றும் களரி பூஜைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் பூக்குழிஇறங்கிய பின்னர் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கற்பூர சுந்தர சாமிக்கு ஏராளமான ஆடு,கோழிகளை பலியிட்டு பின்னர் அதனை சமைத்து படையலிட்டு சுவாமியை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமியாட்டம் ஆடினர்.இந்த விழாவில் மதுரை, காரைக்குடி,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.